
Sriman Ananthaazhwan Swamigal Divya Saridham
ஸ்ரீமான் அனந்தாழ்வான் திவ்ய சரிதம் என்ற இந்த நூல், உண்மைச் சம்பவங்களால் ஆனது. குரு பக்தியையும் தெய்வ பக்தியையும் விளக்குகிறது. இதனைப் படிப்பதன் மூலம் வாசகர்களுக்கு குரு பக்தி என்றால் என்ன என்பது புரிவதோடு தெய்வ பக்தி கட்டாயம் ஏற்படும். ஏனென்றால் இதனை எழுதிய திரு ராமிரெட்டி அவர்கள், சாட்சாத் திருமலை ஸ்ரீ வேங்கடேஸ்வர பெருமாளால் தூண்டப்பட்டு அவர் கூறியதை எழுதியிருப்பதாகக் கூறுகிறார். இதைப் படிக்கும் நமக்கும் அது நூற்றுக்கு நூறு உண்மை என்பது புரிய வரும்.திருமலைக்கு எத்தனையோ முறை சென்று வரும் பக்தர்களுக்குக் கூட அனந்தாழ்வான் தோட்டத்தை பற்றி தெரியாமல் போனது துரதிருஷ்டமே. இதைப் படித்த பின்பாவது அந்த தவறை திருத்திக் கொள்வதற்கு நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். நூலாசிரியர் எத்தனை பணிவோடு திருமலைக்கு வரும் பக்தர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார் என்று படிக்கும்போது, நம் உடன் பிறந்த சகோதரனாக நம்மை நல்வழிப்படுத்த அவர் நினைப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. திருமலை ஸ்ரீனிவாச பெருமாளின் தரிசனம் முடிந்ததும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடிவரும் நமக்கு அவருடைய வேண்டுகோளைப் படிக்கும்போது இத்தனை நாள் அவ்விதம் செய்யவில்லையே என்ற வெட்கம் மேலிடுகிறது.இது ஆச்சார்ய பக்தியையும் தெய்வபக்தியையும் எடுத்துரைக்கும் ஆன்மீக நூலானாலும், சற்றும் தொய்வின்றி ஒரு நாவலைப் படைப்பது போல, எடுத்தால் கீழே வைக்க முடியவில்லை. அத்தனை ஆத்மார்த்தமாக எழுதியுள்ளார் ஆசிரியர்.இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவரும், மொழிபெயர்ப்பு என்ற எண்ணம் துளியும் ஏற்படாத விதமாக மூல நூலே தமிழ்தானோ என்பது போல மொழிபெயர்த்து இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆன்மீக அன்பர்கள் கட்டாயம் இந்த நூலை வாங்கிப் படித்து பயனடைந்து, ஸ்ரீமான் அனந்தாழ்வானின் தெய்வ பக்தியையும் குரு பக்தியையும் அறிந்து கொண்டு தாமும் அவ்வழியில் முன்னேறுவார்கள் என்பதில் ஐயம் இல்லை.தி ஹிண்டு குரூப்பினர் மிகச் சிறப்பாக இந்நூலை வெளிக்கொணர்ந்துள்ளனர்.
Out of stock
Rs.399.00
Customize
Product Details
| Language | Tamil |
| Category | Shrine Series |
| Launch Year | 2023 |
| Number of Pages | 184 |
| Author | P.V.RAMI REDDY |
| Binding | HARDBOUND |


